Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து புதன்கிழமை (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில், ஹட்டன் – போடைஸ் ஊடாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு பேருந்திற்கு இடம்கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேர்ந்த சமயம் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
க. கிஷாந்தன்




29 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026