Editorial / 2023 ஜூன் 11 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை சுற்றிவளைத்த போதே, இந்த கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பு தேடுதலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்த காரியாலயத்துக்கு, ஏனைய நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பிவைப்பதற்கான அனுமதி உள்ளது. எனினும், தென்கொரியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான அனுமதி இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷேன் செனவிரத்ன
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago