2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

28ஆவது வருட மஹா மண்டல ஐயப்பப் பூஜை

ஆ.ரமேஸ்   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தப்பளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் 28ஆவது வருட மஹா மண்டல ஐயப்பப் பூஜை, எதிர்வரும் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் பிரம்ம ஸ்ரீ சுந்தரபவிதர சர்மாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மஹாமண்டலப் பூஜையை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் விநாயகர் வழிபாடு, புண்ணியவாசனம், விசேட ஸ்நபனாபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது.

காலை பத்து மணிக்கு, ஐயப்ப சுவாமிகளுக்கு அலங்கார பூஜையுடன், ஆனந்த மிகு பஜனையும் அதைத் தொடர்ந்து பகல் 1 மணி முதல் 18ஆம் படி பூஜையும் மகேஷ்வர பூஜையும் நடைபெற்று, அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல், திருவிளக்குப் பூஜை நடைபெற்று, தொடர்ந்து ஐயப்பனுக்கு அலங்காரப் பூஜையும் நடைபெறவுள்ளது. என​வே, இந்தப் பூஜை வழிபாடுகளில், அனைத்து பக்தர்களையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .