2026 ஜனவரி 21, புதன்கிழமை

3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

‘தோட்டத் தொழிலாளர்களைத் தோட்ட அதிகாரி, சர்வாதிகாரமாக நடத்துகின்றார்‘ எனத் தெரிவித்து, குறித்தஅதிகாரியையும், அத்தோட்ட தலைமை குமாஸ்தாவையும் உடனடியாக இடமாற்றம் செய்யகோரி, தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ட்றூப்,கொரின் தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக 3 வது நாளாகவும் நேற்று (14) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ட்றூப்,கொரின் ஆகிய தோட்டங்களைச்
சேர்ந்த 450 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தவாறே தொழிலுக்குச் செல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழமையாக  அறவிட்டு வந்த மரண பணம் தற்போது
அறவிடுவதில்லை. தொழிலாளர்கள் 100 சதவீதம் வேலை செய்தால் மட்டுமே அவர்களுக்கு
வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுகிறது.

அதில் 2 நாட்கள் குறைந்தாலும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில்  பணம் வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூட்டுறவு சங்க பணம் கம்பனி வழங்கினால் மாத்திரமே வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை இத்தோட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X