2026 ஜனவரி 21, புதன்கிழமை

30 அடி உயரத்தில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்தது

Freelancer   / 2021 ஜூலை 10 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்
 
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட கிரன்லி மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (10) பெய்த கடும் மழை காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புக்கு பின்புறத்தில் உள்ள சுமார் 30 அடி உயரத்தில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதம் ஆகியுள்ளது.

அத்தோடு வீட்டில் நித்திரை கொண்டிருந்த இரண்டு முதியவர்கள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுவர் இடிந்து விழுந்த போது அதில் சிக்கி உள்ளனர்.

பொதுமக்களின்  உதவியுடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின.  
 
இதில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான நிவாரண உதவிகளை அக்கரப்பத்தனை பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சம்பவ இடத்துக்கு வந்த பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்ச் செல்வன் தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்ட மக்கள் தோட்டத்தில் உள்ள பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
M

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X