Ilango Bharathy / 2021 ஜூலை 19 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ஆரம்ப கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கலவான தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கு
வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்று அமைப்பதற்கும், தொலொஸ்வல பாரதி தமிழ்
வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும், ஹிதெல்லன தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் விடுதியொன்றை அமைப்பதற்கும், மாதம்பை இலக்கம்:02 தமிழ் மகா வித்தியாலயத்தின் மலசலகூட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் இந்நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026