2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

334 தாதியர்களுக்கு நியமனம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹந்தானையிலுள்ள தாதியர் பயிற்சி பாடசாலையிலிருந்து பயிற்சியை முடித்து வெளியேரிய 334 தாதியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் சுகாதார அமைச்சர்  மைத்திரிப்பால சிரிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை கண்டி தாதியர்ப் பயிற்சி பாடசாலையிலே நடைபெற்றது.

இங்கு உரை நிகழ்த்திய சுகாதார அமைச்சர் மைத்திரிப்பால சிரிசேன, தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுள், அடிப்படைத் தகுதியுள்ள அனைவரும் பயிற்சித் தாதியர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்தார்.

இன்று நாட்டில் தாதியருக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வைத்திய சாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பத் தேவையான அளவு விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. எனவே அடிப்படைத் தகைமை கொண்ட அனைவரையும் தாதிகளாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X