R.Maheshwary / 2022 ஜூலை 26 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் 36 குடும்பங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தோட்ட நிர்வாகத்தால் தேயிலை தொழிற்சாலைக்கு விறகுக்காக பாரிய மரம் ஒன்று தரிக்கப்பட்ட போது, மரம் முறிந்து மின்சார தூண்கள் மீது விழுந்ததால் 36 குடியிருப்புக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் 12 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகளின் மீது தூண்கள் விழுந்ததன் காரணமாக வீடுகளும் பகுதி அளவில் சேதமாகி உள்ளன.
இதனால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக மின்சாரத்தினை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கியதுடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள், சேதமாகிய தூண்களை அப்புறப்படுத்தி
இரண்டு நாட்களில் சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago