2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேதீஸ்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மேற்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள்,
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக நேற்று (15) மூன்றாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தை
முன்னெடுத்தனர்.

கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பணிகளில் தோட்ட நிர்வாகம் முறைகேடாக நடந்துக்கொள்ளும்
நிலையில், இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த மாதம் 12ஆம் திகதி தலைமை
வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் தோட்டத் தொழிற்சங்கமொன்றின் தலைவர் ஒருவரால்
தாக்கப்பட்டார்.

இந்த நிலையில் வெளிக்கள உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம்
(14) வெளிக்கள உத்தியோகத்தர்களால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வெளிக்கள உத்தியோகத்தரைத் தாக்கிய தோட்டத் தலைவர் பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தோட்ட நிர்வாகம் மீண்டும் தொழில் வழங்க
வேண்டுமென்றும் கோரியே தொழிலாளர்களால் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேற்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள்,

வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .