2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

4 நகரங்களில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு

Freelancer   / 2023 பெப்ரவரி 23 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். 

நுவரெலியா கந்தப்பளை,இராகலை,மற்றும் உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதான நான்கு நகரங்களில் கடந்த இரண்டு தினங்களாக முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக வெதுப்பகங்கள், ஹோட்டல்களில் முட்டைகள் பாவித்து செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் வெதுப்பி உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்ணய விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படும் போதிலும் முட்டைகளுக்கு கடுமையான தட்டுப்பாடுகள்  நிலவுகின்றன. இந்த நிலையில் நுகர்வோரும் தங்களது வீட்டு சமையலுக்கு முட்டைகள் பெற்று செல்வதில் சிரமப்படுகின்றனர்.

அதேநேரத்தில், இராகலை மற்றும் உடப்புஸ்ஸலாவ பிரதான நகரங்களில் ஒரு சில சில்லறை கடைகள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில்  வெள்ளை நிற முட்டை ஒன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும் வெள்ளை முட்டை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X