Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில், அரசாங்க பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான தேயிலைக் காணிகளில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்டக் காணிகள் தரிசுநிலக் காணிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டச் சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர், மாத்தளை மாவட்டத்தில் தேயிலைத் தொழிற்றுறை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேற்படி மாவட்டத்தில், அரசாங்க பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான 23 தேயிலைத் தோட்டங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன், இந்தத் தேயிலைத் தோட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறி என்றும் அவர் தெரிவித்தார்.
23 தேயிலைத் தோட்டங்களில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த அநேகமான பிரதேசங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
செம்புவத்தை சுற்றுலா வலயத்துக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர் என்றும் எனினும் அங்கு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்களை, பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
தேயிலைக் காணிகளுக்கு உரம் தெளிக்க வேண்டும் என்று கூறி ஒரு தொகை பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் ஆனால், தேயிலைக் காணிகளுக்கு உரங்கள் தெளிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் சொல்லொனாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பது உரிய அதிகாரிகளின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
19 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago