Freelancer / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
5,000 ரூபாயாக மதிக்கக்கூடிய போலிய நாணயத்தாள்களை அச்சடித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 43 தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கண்டி, அலவத்துகொட நகரிலேயே இடம்பெற்றுள்ளது.
அலவத்துகொட நகரில் புகைப்படம் பிடிக்கும் நிலையத்தை நடத்திச் சென்றவர்களே இவ்வாறு போலி நாணயத்தாள்களை அச்சடித்து சந்தைக்கு விட்டுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நிலையத்தில் இருந்த கணினி உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பண்டிகை காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வந்து 5,000 ரூபாய் நாணயத்தாளை மாற்றிக்கொண்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்நபர், 5,000 ரூபாய் போலி நாணயத்தாளை மாற்றும் தரகர் என்பது கண்டறியப்பட்டது. பொலிஸாரை கண்டதும் அந்தநபர், தான் வைத்திருந்த சுமார் 40 போலி நாணயத்தாள்களை அருகிலிருந்த மலசலக்கூடத்தில் வீசியுள்ளார்.
அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போதே போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் கண்டுப்பிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேநபர்கள் இருவரையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹொமட் ஆஸிக்
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago