2026 மே 06, புதன்கிழமை

’5,000 ரூபாய்க்கு அரசியம் சாயம் பூசாதீர்’

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கு, அரசியல் சாயம் பூசாதீர் என்று அறிவுறுத்தியள்ள புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிச கட்சி, இந்தக் கொடுப்பனவு, மக்களுக்கு பாகுபாடின்றி சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் வைத்தியலிங்கம் மகேந்திரன், அதில் மேலும் கருத்துரைக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அரசாங்க நிவாரண உதவிகளில் பாகுப்பாடுகள் காட்டப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் ரோஹன புஸ்பகுமாரவின் கவனத்துக்கு புதிய ஜனநாயக மாக்ஸிச லெலினிச கட்சி கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .