2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5 ஆம் வகுப்பு புத்தகங்கள் இரண்டு 10ஆம் வகுப்புக்கு சமமாகுமா?

R.Maheshwary   / 2022 ஜனவரி 12 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் முழுமையான ஐந்து புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு வர்த்தமானி பிரகடனம் உள்ள போதும் உப செயலகங்களை திறந்து வைத்துவிட்டு அவை முழுமையான பிரதேச செயலகங்களுக்கு சமமானவை என நியாயயப்படுத்த முனையும் அரசியல்வாதிகளின் கருத்து, ஐந்தாம் வகுப்புப் புத்தகம் இரண்டு வாங்கினால் பத்தாம் வகுப்பு படிக்கலாம் என்பதற்கு ஒப்பானது என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை முழுமையாக  அமைப்பதை  வலியுறுத்தி  மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும்  கையெழுத்து இயக்கத்துக்கு ஒருமைப்பாட்டைக் கோரும் சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடல் ( ஞாயிறு ) மெய்நிகர் வடிவில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதேச செயலகமும் உப செயலகமும் ஒரே அதிகாரங்களைக் கொண்டவைதான் என அதனைத் திறந்து வைத்த அரசியல் தரப்பு கூறியதாக, கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு புத்தகம் இரண்டு வாங்கிக் கொடுத்தால் சரியாகிவிடும் என எண்ணும் அரசியல்வாதிகளின் போக்கு இது என தனது விமர்சனத்தை முன்வைத்தார். 

இவர்களைப் புரிந்து கொண்டு சமூகமாக சாத்தியமான தீர்வுகளை நோக்கி நாம் ஜனநாயக ரீதியாக எமது நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஒத்துழைப்பு அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .