2025 ஜூலை 21, திங்கட்கிழமை

500 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்

ஹட்டன் தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து 500 கிராம் கஞ்சாவுடன், செவனகல, கினிகத்தேனை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 27, 40 வயதுடைய இருவரை, செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை  தொடர்ந்து, கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸை, தியகல பகுதியில் வழிமறித்த பொலிஸார்  சோதனைகளை மேற்கொண்ட போதே, மேற்படி இருவரையும் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் கஞ்சாவை கொள்வனவு செய்யும் இருவரும் அதனை, கினிகத்தேனையிலுள்ள தோட்டப்புறங்களுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்வதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X