Editorial / 2023 மே 31 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டெஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள சாமிமலை ஆற்றில் நீராடச் சென்ற 52 வயதான பாலன் தனலெட்சுமி தடுக்கி விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
இறந்த நிலையில் கிந்த பெண்ணை, மீட்ட மஸ்கெலியா பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மரணமடைந்த பெண், கடந்த முப்பது ஆண்டுகளாக வலிப்பு நோயால் பீடிக்கப்பட்டு இருந்தவர் என்றும், நீரில் விழுந்த போது அவருக்கு வலிப்புநோய் ஏற்பட்டுள்ளது என்றும் சட்ட வைத்தியர் தெரிவித்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பூதவுடல் ஒப்படைக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago