2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

8 வயது சிறுமி சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 ஜூன் 13 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளது.

வீட்டின் வாசல்  பகுதியில்  உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 நேற்று காலை 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹைபொரஸ்ட் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம் பெற்ற அன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும் தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்த்தாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலை பட்டியை அப்புறுப்படுத்திய அயலவர்கள்,  சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக  சிறுமியின் சடலம்

இன்று காலை  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X