2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

9 நாள்களின் பின்னர் ஹட்டன் நகர பொதுச் சந்தை திறப்பு

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த ஹட்டன் நகர பொதுச்சந்தை பகுதி, 09 நாள்களின் பின்னர், இன்று (04) காலை முதல்   வியாபார நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டது.

ஹட்டன் - டிக்கோயா நகரசபையால், குறித்தப் பகுதிக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார நடைமுறையுடன், வியாபாரத்தை நடத்த, வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து.

கடந்த 25ஆம் திகதி, சந்தைப்பகுதியிலுள்ள மீன் விற்பனையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் நெருங்கியப் பழகியவர்கள், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தப் பரிசோதனையின் போது, 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் சந்தைப்பகுதி சுயதனிமைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, சந்தைப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும், தொற்றுக்குள்ளான மீன் விற்பனையாளரின் கடை தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X