Freelancer / 2023 ஜூலை 21 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியாவில் இலத்திரனியல் இயந்திரம் ஊடாக நேற்று மாலை பணத்தை பெற்றுக் கொள்ளச் சென்ற பெண் ஒருவர் அங்கு இருந்த இளைஞர் ஒருவரிடம் இலத்திரனியல் அட்டையைக் கொடுத்து 120,000 ரூபாய் பணத்தை மீள பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த இளைஞர் முதல் 10,000 ரூபாய் பணத்தை பெற்று தான் வைத்துக் கொண்டு, மீண்டும் அந்த பெண் கூறிய தொகை 120,000 ரூபாயை இயந்திரத்தில் இருந்து பெற்றுக் கொடுத்து உள்ளார்.
அந்த பெண் சற்று சந்தேகம் அடைந்த நிலையில் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்த வேளையில் சந்தேக நபரான இளைஞன் இலத்திரனியல் அட்டையை எடுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்று உள்ளார்.
அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த இளைஞனை பிடித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி இன்று காலை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். R
9 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
33 minute ago