Editorial / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவ நரியகந்தவில் இடம்பெற்ற “Foxhill Super Cross Race” கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போட்டியாளர்கள் இருவருக்கும் பண்டாரவளை நீதிமன்ற நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்
தியத்தலாவ நரியகந்த ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் 5ஆம் இலக்கத்தின் கீழ் போட்டியிட்ட மாத்தறை மெதபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் உடுவ் (36), மற்றும் 196 ஆம் இலக்கத்தின் கண்டி பேராதனை மாகந்தவைச் சேர்ந்த ஏ.எம்.டிலான் சஞ்சீவ (47) ஆகியோர் போட்டியிட்டனர்.
இலங்கை மோட்டார் பந்தய சங்கம் மற்றும் தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமான Foxhill மோட்டார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகள் தியத்தலாவ நர்யகந்த மோட்டார் பந்தயப் பாதையில் நடைபெற்றது.
போட்டியின் 18வது நிகழ்வான Ford/Laser Mazda இன்ஜின் திறன் கொண்ட 1500 cc கார் பிரிவில் கார் பந்தயங்கள் நடந்து கொண்டிருந்தபோது, இந்த இரு போட்டியாளர்கள் ஓட்டிச் சென்ற இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago