R.Maheshwary / 2021 நவம்பர் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JEDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் செய்த வேலைக்கான சம்பளம், இந்த மாதம் 10ம் திகதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அதை விடுத்து JEDB நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி பற்றாக்குறை என கூறி சம்பளத்தை JEDB நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டதக்கது.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய முக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தாது அலட்சிய போக்கில் உள்ளனர்.
நாட்டில் அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் குறிப்பிட்ட திகதியில் சரியான முறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அரசின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படாமை என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில்,தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை செலவை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் JEDB யின் இந்த செயற்பாடு முற்றிலும் கண்டிக்கதக்கது.
எனவே, தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தாமதமின்றி குறிப்பிட்ட திகதியில் JEDB நிறுவனம் கண்டிப்பாக வழங்க வேண்டும். வழங்க தவறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் தலைவர்,இயக்குனர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக தொழில் அமைச்சின் கவனத்திற்கு செந்தில் தொண்டமானால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago