2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

‘World Book of Records‘ விருதுக்கு செந்திலின் பெயர் பரிந்துரை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

World Book of Records என்பது உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் முதன்மை குறிக்கோள்  உளகளவில்  அறிவியல் , விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சுகாதாரம் , சுற்றுச்சூழல் ,  சமூக மாற்றம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் பணிகளை உலகறிய செய்வதாகும். 
 
 
 
இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின்  இணைப்பு செயலாளருமான  செந்தில் தொண்டமானின் பெயர் இவ்விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கைகளை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச் செல்லுதல், தனி நபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு,  முககவசம், தடுப்பூசி, சமூக இடைவெளி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியது என மக்கள் நலனை முன்னிறுத்தி  பணியாற்றியமைக்காகவே அவரின் பெயர் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X