2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அகற்றப்படாத கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட, ஒஸ்போன் தோட்டத்தில், நீண்ட காலமாக கழிவுகள் அகற்றப்படாமையால், அங்கு பாரிய சுற்றாடல் அச்சுறுத்தலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஒஸ்போன்  தோட்ட நிர்வாகத்தினரால், நோட்டன்- ஹட்டன் பிரதான வீதியோரம் அமைக்கப்பட்டுள்ள இரண்டு  கழிவு சேகரிப்பு தொட்டில்களில்  கொட்டப்படும் கழிவுகள் நீண்ட காலமாக அகற்றப்படவில்லை.

 இதனால் கழிவுகள் நிரம்பி,  நாய்கள் இழுத்துச்சென்று வீதிகளில் போடுவதனால், பிரதான வீதியோராம் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் ஏற்படும்  என அதற்கு அண்மித்துள்ள குடியிருப்பாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒஸ்போன் பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X