Ilango Bharathy / 2021 ஜூலை 04 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் இரத்தினக்கல் அகழ்வதற்கு இடமளிக்குமாறு அப்பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தற்போது நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக இத்துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வசதிபடைத்தோர் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கையில், ஏழைத் தொழிலாளர்கள் காட்டு பகுதிகளில் இந்நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பொலிஸார் அவர்களை கைது செய்து அபராதம் விதிப்பதாகவும், அபராதத் தொகையைச் செலுத்த முடியாதவர்கள் வேறு தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே வசதி படைத்தவர்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படுவது போன்று தமக்கும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு அப்பிரதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் குறித்த மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago