Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 10 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரணை நகரையும் ,அதனை அண்டிய பிரதேசங்களையும் ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓய, மழை காலத்தில் பெருக்கெடுப்பது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்ப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள செயல் திட்ட யோசனைகள் தொடர்பில் அதீத கரிசனை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சென்ற வாரம் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். இந்திகா குமாரி அபேசிங்ஹவுடன் கலந்துரையாடினார்.
பிரஸ்தாப யோசனைகளை உள்ளடக்கிய திட்ட வரைவு நிறைவடைந்த உடனேயே அடுத்த கட்ட நடவடிக்கைககள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அதன்போது வலியுறுத்தப்பட்டது.
கண்டி மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம்,அப்துல் ஹலீம் ஆகியோர் அதிக மழை வீழ்ச்சியின் போது நீண்ட காலமாக அடிக்கடி சம்பவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர்.
முன்னர் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது,கண்டி பிராந்திய அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் காணி மீள் சீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாரிய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி,மண்,மணல் மற்றும் கழிவுகள் மண்டியிருந்த பிங்க ஓயவில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு நீர் தங்கு தடையின்றி வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அவ்வாறே பல்வேறு பயனுள்ள முயற்சிகளை முன்னெடுத்திருந்ததோடு,பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகளோடு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
அங்கு,உரிய அனுமதி பெற்றிராத சட்டத்துக்குப் புறம்பான நிர்மாணங்களும் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago