2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அக்குறணை நகர் மீண்டும் நீரில் மூழ்கியது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்​​

 

மலைய​கத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அக்குறணை நகரில், நேற்று  இரவும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.

வியாபார  நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், வியாபாரிகள் பாரியப் பாதிப்பை எதிர்கொண்டனர்.

இதன் காரணமாக, கண்டி - யாழ்ப்பாணம் ஏ 09 வீதியின் போக்குவருத்தும் பல மணிநேரம் தடைப்பட்டது.

சுமார் 4 அடிக்கு வெள்ளநீர் உயர்ந்திருந்ததாக, நகரவாசிகள் தெரிவித்தனர்.

மேற்படி நகரில், கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட வௌ்ளத்தாலும் நகரிலுள்ள வியாபார நிலையங்கள், பாரியப் பாதிப்பை எதிர்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .