2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அக்குறணையில் அமைதிவழி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாஸாக்களை  அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியும் அக்குறணை நகரில், இன்று (25) பகல் அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அக்குறணை பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கவன் சீலை போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.    

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X