Ilango Bharathy / 2021 ஜூன் 15 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
யட்டியாந்தோட்டை-பனாவத்த பிரதேசத்திலிருந்து நவட்ட பிரதேசத்துக்கு, ஓட்டோவொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட சுகாதாரப் பிரிவினர் அணியும் ஆடைகள், யட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளால் இன்று (15) தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
குறித்த ஆடைகளைத் தைக்கும் நிலையத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும், அவ் ஆடைகளைக் கொண்டு வந்தவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினாலும் இவ் ஆடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு ஆடைகளைத் தயாரிக்கும் 13 நிலையங்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago