2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அதிக விலைக்கு சீமெந்து விற்றவருக்கு எதிராக நடவடிக்கை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார் 

பதுளையில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த லொறியொன்று, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் நேற்று (1) சுற்றிவளைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த லொறியின் சாரதிக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை- முத்தியங்கனை விகாரையின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லொறியிலேயே அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக பதுளை மாவட்ட  நுகர்வோர் விவகார அதிகாரசபையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 1,150 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த லொறியில் 600 மூடை சீமெந்துகள் மிகுதியாக இருந்த நிலையில், ஏற்கெனவே 400 மூடைகள் விற்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த லொறியின் சாரதி நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவருக்கு எதிராக பதுளை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X