2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அதிக விலைக்கு விற்போரை தேடி வலை

Freelancer   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் சீமெந்து மற்றும் இரசாயன உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக  நுகர்வோர் அதிகார சபையின் மாத்தளை மாவட்டத் தலைவர் ரேணுகா குமார தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, பல பகுதிகளில் சீமெந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மூடை சீமெந்து 1350 ரூபாவுக்கும் அதிகமான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சில வியாபாரிகள் சீமெந்து  மூடை  ஒன்றை 1500 முதல் 1600 ரூபா வரையான விலையில் விற்பனை செய்வதாகவும் இந்த விடயம் தொடர்பில் தமது அதிகாரம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ரேணுகா குமார தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு சிறு வணிகர் குழு மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யாது வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் தகவல் கிடைத்துள்ளதா அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்டத்தில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடி நுகர்வோர் அதிகார சபைக்குத் தெரிவிக்கும் படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X