2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அதிகமான தொற்றாளர்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

அதிகமான கொரோனாத் தொற்றாளர்களை ஒரே நேரத்தில் சிகிச்சை வழங்கக் கூடிய வகையில், பாரிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவொன்று, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் இருந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவே, இவ்வாறு
அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டதென்றார். இதில் 6 அதிதீவிர சிகிச்சைக் கட்டில்கள் உள்ளடங்களாக 16 கட்டில்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் தினமும் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனையின் கீழ், இந்த சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் இதற்காக, அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X