R.Maheshwary / 2021 நவம்பர் 11 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
ஹல்துமுல்ல சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கொஸ்லாந்த ஆரம்ப சிங்கள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அப் பாடசாலை இன்று (11) மூடப்பட்டுள்ளதாக பண்டாரவளை வலய கல்வி காரியாலயம் அறிவித்துள்ளது.
பாடசாலையின் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஹல்துமுல்ல பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில், என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹல்துமுல்ல- கொஸ்கமுவ ஆரம்ப பாடசாலையில் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் குறித்த பாடசாலையும் நேற்று மூடப்பட்டதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்தார்.
22 minute ago
31 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
48 minute ago
2 hours ago