Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 15 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன் கல்வி வலயம், கோட்டம் 3க்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை சந்திப்பதில், பாரிய இடர்களை எதிர்கொள்வதாக, மாணவரின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்வதாக, பாடசாலையின் அதிபரை சந்திக்க செல்லும்போது, பாடசாலையின் நிர்வாகம் தம்மை அலைக்கழிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக லிகிதர், பிரதி அதிபர், உதவி அதிபர் ஆகியோரிடம் அனுமதிப் பெற்றப் பின்னரே, அதிபரை சந்திக்க முடிவதாகவும் இதற்காக சுமார் 3 அல்லது 4 மணித்தியாலயங்கள் காத்திருக்க வேண்டியேற்படுவதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறு காத்திருந்தாலும் முதல்வரை சந்திக்க முடியாமல் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மறே, தெபட்டன், காட்மோர், பெயார்லோன் போன்ற தூரப்பகுதிகளிலிருந்து பாடசாலைக்கு வரும் பெற்றோர், தோட்டத்தில் அரைநாள் விடுமுறை பெற்றே, பாடசாலையின் அதிபரை சந்திக்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமது அரை நாள் வேதனத்தை இழந்து, பாடசாலைக்கு வருகின்ற போதிலும் தங்களது பிள்ளைகளின் கல்வி நிலையை அறியவோ, பிறப்புச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவோ, விலகல் சான்றிதழ் பெறவோ முடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்று, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago