2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அதிபர்- ஆசிரியர்களுக்கு எதிராக லிந்துலையில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், பாலேந்திரன்

 அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தலவாக்கலை, லிந்துலை - ராணிவத்தை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோருமே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன்படி பாடசாலையை திறப்பதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுமே போராடுவதாக பெற்றோர் தெரிவித்தனர். 

 ' ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களில் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும். அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள், போராட்டமின்றி தீர்க்கப்பட வேண்டும்.' - எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .