Kogilavani / 2016 மே 06 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்
பெல்மடுலப் பிரதேசத்தில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட அம்பிட்டிய ரத்தன ஜோதி தேரரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (6) உத்தரவிட்டார்.
பொகவந்தலாவை பகுதியில் தேரர் ஒருவர் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துக்கொணடதாக பொலிஸாருக்கு கிடைக்கபொற்ற இரகசிய தகவலை தொடர்ந்து அவர் நேற்று(5) கைதுசெய்யப்பட்டார்.
பெல்மடுல போதிமா விகாரையை சேர்ந்த மேற்படி தேரர் விகாரையை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என கூறி, நோர்வூ10ட், மஸ்கெலியா, பொகவந்தலாவை போன்ற பிரதேசங்களில் மக்களிடம் பணம் வசூலித்தாகவும் வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு மது அருந்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
இவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
16 minute ago
27 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
57 minute ago