Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
பொகவந்தலாவை கொட்டியாகலை என்.சி தோட்டப்பகுதியில் அநாதரவாக வாழ்ந்து வந்த நிலையில் உயிரிழந்த வல்லியம்மா வீரய்யாவின் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்கு தோட்டமக்கள் முன்வந்துள்ளனர்.
தனது மகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், வீரய்யா மற்றும் அவரது மனைவி வல்லியம்மா வீரய்யா ஆகியோர் தோட்ட மக்களின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த வல்லியம்மா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வல்லியம்மாவின் கணவர் வாதநோயினால் பாதிகக்பட்டவரரெனவும், தனது கணவருக்குத் தேவையான அனைத்து பணிகளையும் வல்லியம்மாவே மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கபட்டிருந்த வல்லியம்மா இன்றைய தினம் (07) காலை காலை 08மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்த செய்தி, பொகவந்தலாவை பொலிஸார் ஊடாக வல்லியம்மாவின் மகளுக்கு தொலைபேசி முலம்தொடர்பு கொண்டு அறிவிக்கப்பட்டதாகவும், எனினும் தாம் கொழும்பில் இருப்பதாகவும் தன்னால் வரமுடியாது அவர் கூறியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025