Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தில் மரக்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும்போது,
அன்றாட வியாபாரிகளுக்கு அவ் அனுமதிபத்திரங்களை வழங்காமல், அரசியல்வாதிகளின்
நண்பர்களுக்கு வழங்கியுள்ளதால் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் பாரிய சிக்கள்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை வர்த்தக நிலையத்தின் மொத்த வர்த்தக சங்கம்
தெரிவிக்கின்றது.
கட்டுகஸ்தோட்டை வர்த்தக நிலையத்தின் வர்த்தக சங்கத்துக்கும் பிதேச
செயலாளருக்குமிடையில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே, வர்த்தக சங்கத்தின்
தலைவர் டி.என்.சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகளின் நண்பர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதால், அவர்கள்
மிகக் கூடிய விலையில் மரக்கறிகளை விற்பனை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .