Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக காங்கிரஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், கலந்துரையாடல்களின்படி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் தெனியாய கொட்டபொல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற தனது கட்சியிலிருந்து உள்ளூராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கோரிக்கையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை மட்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும், துணைத் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கும் வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து நான்கு மாகாண சபைகளின் புதிய தலைவர்களை நியமிப்பது குறித்து தனது கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கொட்டகலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை (16) நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு பல வெற்றிகளைப் பெற்றதாகவும், அதன்படி, பல உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாகவும் உறுப்பினர்களிடம் கூறினார்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025