2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அபாயத்தில் இயங்கும் முன்பள்ளி பாடசாலை

Freelancer   / 2023 மே 23 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் சிங்காரவத்தை தோட்ட பகுதியில் இயங்கும் பிரிடோ முன்பள்ளி பாடசாலையானது எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சுவர்கள் இடிந்துவிழும் அபாயத்தில் இயங்குவதாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். 

இந்த முன்பள்ளி பாடசாலையில் சுமார் 20கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதிலும் குறித்த பாடசாலையில் மலசலகூட வசதி மின்சார வசதி, மற்றும் கட்டிடங்களில்  பாரிய வெடிப்புகள் கானப்பட்டு இடிந்து விழும் ஆபாயத்தில் கானப்படுவதோடு கூரை தகடுகளும் பழுதடைந்த நிலையல் கானப்டுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

அந்தவகையில் இந்த  கட்டிடம் ஆங்கிலேயேர் காலப்பகுதியில் கட்டப்பட்டதாகவும் ஆரம்ப காலத்தில் இந்த கட்டிடம் சிங்காரவத்தை தமிழ் வித்தியாலயமாக இயங்கியதாகவும் தற்பொழுது 20வருட காலமாக முன்பள்ளி பாடசாலையாக இயங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது.


எஸ். சதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X