2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கொரோனா தொற்றால் மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், குறித்த அபிவிருத்தி திட்டங்களை விரைவாக
நிறைவு செய்ய அனைத்து அதிகாரிகளும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார
கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். மாவட்ட அபிவிருத்தியின் தேர்ச்சி, மாவட்டம் மற்றும் மாகாண நிதியத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல், தடுப்பூசி நடவடிக் மற்றும் கொரோனா ஒழிப்பு செயற்பாடு உள்ளிட்டவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X