R.Maheshwary / 2021 நவம்பர் 08 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு,கேதீஸ்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஊடாக 2021 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மஸ்கெலியா, அக்கரப்பத்தனை நோர்வூட் கொட்டகலை,லிந்துலை தலவாக்கலை,ஹட்டன் ஆகிய நகரசபை மற்றும் பிரதேச சபைகளில் அமைச்சின் ஊடக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் ஹட்டன்,நுவரெலியா ஆகிய பிராந்திய காரியாளயங்களில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறையில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் வீடமைப்புத் திட்டங்களுக்கு இடத்தினை தெரிவு செய்யும்போது, முறையான இடத்தினை தெரிவு செய்தல், அத்தோடு தற்காலிக கூடாரங்களில் தங்கி வசிக்கும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பிரதேச சபை தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அமைச்சின் செயலாளர் D.P.G.குமாரசிரி மற்றும் அமைச்சின் அதிகாரிகள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
20 minute ago
29 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
46 minute ago
2 hours ago