எஸ் சதீஸ்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட உப தலைவர் அமரர் பி.கே.ரட்ணசாமி அவர்களின் பூதவுடல் நேற்று(11) நோர்வூட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அன்னாரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பூதவுடல் சுகாதார முறைப்படி நோர்வூட் தகன மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
கிளங்கன் வைத்தியசாலைக்கு வருகைதந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ மயில்வாகனம் உதயகுமார் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும்
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் கல்யாணகுமார் உட்பட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமரர் பி.கே.ரட்ணசாமியின் உறவினர்களிடம் தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.