2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அமரர் லெனின் மறைவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

R.Maheshwary   / 2022 நவம்பர் 14 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

மலையக கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர்  லெனின் மதிவாணம்  அவரின்   இறப்பு செய்தி தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மலையகத்தின் சிறந்த கல்விமான், எழுத்தாளர்,திறனாய்வாளர் என பன்முக ஆளுமைமிக்க லெனின் மதிவாணம் அவர்களின் மறைவையிட்டு, அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சில வருடங்களாக சுகயீனமுற்று இருந்த அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் எவரும் எதிர்பாராத அவரின் மறைவு செய்தியே எமக்கு கிடைத்தது. தான் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இருந்தபோது எம்மோடு கல்வி மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு  விடயங்களில் மிகவும் நெருக்கமாக  சேவையாற்றியவர் அவர்.

அமரர் லெனின் மதிவாணம் மலையகத்தின் சிறந்த கல்விமானும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் ஆவார். அவர் இலங்கையின் பல முன்னோடி தமிழ் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன்  முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமாக பணியாற்றியுள்ளார். அன்னாருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். அன்னாரின்  இழப்பு மலையக கல்வி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .