2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமரர் லோரன்ஸ் பற்றி சில வரிகள்

Editorial   / 2023 மே 30 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

 

“மலையகம் சமகால அரசியல் அரசியல் தீர்வு” என்ற நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ள அமரர் அந்தனி லோரன்ஸ் தனது  ஆரம்பகால கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையிலும் க.பொ.த சாதாரண தரத்தை தலவாக்கலை சென்பெற்றிக்ஸ் கல்லூரியிலும் உயர்தரத்தை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டவர்.

 

கல்லூரி காலத்திலேயே தோழர் என்.சண்முகதாசன் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டு இயங்கியவர்.

 70களில் கருத்து முரண்பாடு காரணமாக சண்முகதாசனிடம் பிரிந்து தோழர் காமினியப்பா கௌரிகாந்தன் தலைமையில் இயங்கிய கிளைக்காற்று இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு 1974 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக சிறை சென்றவர்.

77 ஆம் ஆண்டு யாழ் .வீரசிங்க மண்டபத்தில் நடந்த இலங்கை ஆசிரியர் சங்க மாநாட்டில் பி. ஏ. காதரோடும் கௌரிகாந்தன் அவர்களோடும் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் மழையக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தனியான தேசிய இனம் என்ற கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் காதரோடு இணைந்து செயல்பட்டவர்.

காதர், தர்மலிங்கம் ஆகியோரோடு மலையக வெகுஜன இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களின் முக்கிய உறுப்பினர்களாகவும் செயல்பட்டவர்.

80களில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இளைஞர் சேவை அலுவலராக இணைந்து நுவரெலியா மாவட்ட இளைஞர் சேவை அலுவலராக கிட்டத்தட்ட 15 வருடங்கள் அரசாங்க சேவையிலும் கடமையாற்றியவர்

80 களில், மலையாக வெகுஜன இயக்கத்தின் வெளியீடான விடிவு என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார் யுவிடெப் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் (மலையக தொழிலாளர் தகவல் அபிவிருத்தி நிறுவனம்) அதன் தலைவராகவும் பிரதான இணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டிலிருந்து மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயல்படுவதோடு அதன் ஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவராகவும் அக்கட்சியின் உப தலைவராக இருந்த  தர்மலிங்கம் காலமாகியதன் பின்னலட அவரின் இடத்திற்கு உப தலைவராக நியமிக்கப்பட்டதோடு பின்பு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாகவும் மறைகின்ற பொழுது  மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும் செயல்பட்டவர்.

பல் பரிமாண அனுபவங்களை கொண்ட லோரன்ஸ் இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக தாய்லாந்து, ஜெர்மன், மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கருத்தரங்குகளில் மலையக தமிழ் மக்கள் சார்பாக பங்கு பற்றியுள்ளதோடு அரசியல் தீர்வில் மலையக தமிழ் மக்கள் பிரச்சினையை வலியுறுத்தி பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மலையகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பின் உருவாக்கத்தில் தனது அயராத பங்களிப்பை வழங்கியதோடு அதன் முதலாவது செயலாளராகவும் இருந்து திறமையாக செயல்பட்டுள்ளார்.

மேலும் மலையக பகுதிகளில் பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்பதை ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு இடங்களில் குரல் கொடுத்ததோடு இது தொடர்பாக அமரர் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தொகுத்து கொடுத்ததற்கும் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார்.

அமரர் லோரன்ஸ் மும்மொழிகளிலும் சரளமாக பேசவும் எழுதவும் கூடியவர் இவருடைய மறைவானது மலையகத்திற்கு மாத்திரமல்லாது சர்வதேச மட்டத்திலும் மலையக மக்கள் முன்னணிக்கும் பாரிய இழப்பாக அமைந்திருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .