2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அமைதியாக இருக்குமாறு தெரிவித்த கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு பொறுப்பான பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளைத் தாக்கிய சந்தேக நபரை இம்மாதம் 9ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் திலின எம்.பீரிஸ் இன்று  உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தனது நண்பருடன் வழக்கு ஒன்றிற்காக  இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த போது, ​​நீதிமன்றில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்றில் அமைதியாக இருக்குமாறு எச்சரித்தமையினால் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதன்போது  ​​நீதிமன்றப் பகுதியில் கடமையாற்றிய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைப் பிடித்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .