Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
அம்பேகமுவ பிரதேச சபையைத் துண்டாடுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக, நீதிமன்றம் செல்வதற்கு மலைநாட்டு முற்போக்கு மக்கள் இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பிரதேச சபையை, மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் அம்பேகமுவ ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மஸ்கெலியா பிரிவை, ஸ்ரீபாத பிரிவுக்குள் உள்ளடக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி, அப்பகுதியில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும் என்றும், அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, மலைநாட்டு முற்போக்கு மக்கள் இயக்கத்தின் தலைவரும் அம்பேகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஹெல பிரியநந்தராஜா தெரிவித்தார். அம்பேகமுவ பிரதேச சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தை, மூன்றாகப் பிரிப்பது தொடர்பில், கினிகத்ஹேன அபித்தவாராம விகாரையில், அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்குத் தெளிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று (29) இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
“அம்பேகமுவ பிரதேச சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில், வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உண்மையான நல்லிணக்கத்துடன் வாழ்க்கின்றனர். அவ்வாறான நிலையில், அந்தப் பிரதேசத்தைத் துண்டாடுவது, இனங்களுக்கு இடையிலிருந்த நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்” என்றார்.
“பிரிக்கவேண்டிய தேவையொன்று ஏற்பட்டிருக்குமாயின் பழைய கிராமசபை முறைமையின் கீழ், பிரிக்கவும்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். நுவரெலிய மற்றும் அம்பேகமுவ ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரங்களுக்குக் கீழிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாவிடின், இவ்விரு பிரதேச சபைகளையும் தவிர்த்து, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சே, மேற்கண்டவாறு கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
நுவரெலியா மற்றும் அம்பேகமுவ பிரதேச சபைகளின் அதிகாரங்களுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை, நில அளவு அதிகமாகும் என்பதால், அவ்விரு பிரதேசங்களிலும் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, பெருந்தோட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கோரிக்கைகளை விடுத்துள்ளன.
அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக, எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
அந்த நடவடிக்கைகள் நிறைவடையாமையால், உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்பார்க்கப்படும் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடமுடியாத நிலைமையொன்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
2 hours ago