2026 மே 02, சனிக்கிழமை

’அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்’

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நிவாரணப் பணிகளில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'ஊரடங்கு காலத்தில், அரச உத்தியோகத்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்யவும் ஏனைய தொழிலை இழந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

'எனினும் நிவாரணம் வழங்கும் திட்டத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். உண்மையில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை திறம்பட செய்து வருகின்றனர். 

'ஆனாலும் மக்கள் குடிசன மதிப்பீட்டு அறிக்கையயில் 57 ஆயிரம் குடும்பங்கள் பதிவாகியுள்ள நிலையில் நிவாரணம் பெற்றுக்கொள்ள, 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளமை எவ்வாறு என்பதை  தேடி பார்க்க வேண்டும். 

'இவ்வாறான  நிலையில் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்' எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .