2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அரச செயலங்கள் செயற்படும் விதத்தில் திருப்தியில்லை

Freelancer   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

வயோதிபர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகள் விடயத்தில், பதுளை மாவட்ட அரச செயலகங்கள் செயற்படும் விதம் திருப்தியைத் தரவில்லை என்று  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி, 70 வயதைத் தாண்டியவர்கள் அனைவருக்கும், மாதாந்த வயோதிபத் கொடுப்பனவுகளை வழங்க ஆவன செய்யும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அ. அரவிந்தகுமார் எம்.பியால், இலங்கை சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய வயோதிப செயலகப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே  மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  லுணுகலை பிரதேச செயலகம் உள்ளிட்ட பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் மாதாந்த வயோதிபக் கொடுப்பனவுகள், புதிதாக வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

வயோதிப கொடுப்பனவுகள் வழங்கப்படும் பட்டியலில் ஒருவர் இறந்தால் மட்டுமே, புதியவரொருவர் இணைத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு மாதாந்தக் கொடுப்பனவு புதிதாக வழங்கப்படுகிறது. அதைவிடுத்து புதியவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளன. 

இது விடயமாக பிரதேச செயலாளர்களிடம் வினவும் போது, வயோதிபர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. இதனால் 70 வயதுகளைத் தாண்டிய புதியவர்களை இணைத்துக்கொள்ள முடியாதுள்ளது. ஆகையினால்,  இதனை நிறுத்தியுள்ளோம் என்று பதில் கிடைக்கின்றது. 

70 வயதுகளைத் தாண்டியவர்களுக்கு வழங்கப்படும் வயோதிபச் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டிருப்பதால்,  வயோதிபர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

ஆகவே,   இது விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி, 70 வயதைத் தாண்டிய அனைவருக்கும்  மாதாந்த வயோதிபக் கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதுடன், அக்கொடுப்பனவுகளை அதிகரிக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X