2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்தின் முடிவால் மரக்கறி செய்கைக்கு பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 20 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்

அசேதன பசளைக்கு உற்பத்திகள் பழக்கப்பட்டுள்ளதால், மண் வளத்தை சேதனப் பசளைக்கு
மாற்றி மண்ணை வளப்படுத்த குறைந்தது 2 வருடங்களேனும் செல்லும் என தெரிவித்துள்ள
முன்னாள் நீதித்துறை பிரதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி, அதுவரை நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி உற்பத்திக்கு பாதிப்புகள் காத்திருக்கின்றன என்றார்.

காலம் அறியாது அரசாங்கத்தின் அசேதனப் பசளைத் தடையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்குப்பின், நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கை பாதிக்கப்படுவது உறுதி என்றார். 

அசேதனப் பசளை பற்றாக்குறை குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே,
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், நுவரெலியா மாவட்டத்தில் 85 சதவீதமானவர்கள் மரக்கறி உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். நாடுபூராகவும் உள்ள சந்தைகளுக்கு நுவரெலியாவிலிருந்து பெருந்தொகை மரக்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில், அசேதனப் பசளைக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, அசேதனப் பசளை
இறக்குமதியை நிறுத்தி விவசாயத்துறையின் எதிர்காலத்தை அரசாங்கம் கேள்விக்குறியாக்கி
உள்ளதென்றார்.

எனவே, அரசாங்கம் இதுகுறித்து கவனம் செலுத்தி நுவரெலியா மாவட்டம் மட்டுமின்றி அனைத்து பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அசேதனப் பசளை இறக்குமதிக்கு உடனடி தீர்வை எடுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X