Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணையப்போகின்றது என்ற தீர்மானம் தொடர்பாக, கட்சியில் எந்தவொறு முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவ்வாறு கருத்துகளைத் தெரிவித்தார்களாயின் அது அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும் என்றும் அவர் கூறினார்.
மடவளை பஸார் தேசியக் கல்லூரியிலுள்ள அஷ்ரப் கேட்போர் கூடத்தில், சமூக சேவையாளர் ஜே.எம். சித்தீக் எழுதிய “தப்புக்கணக்கு” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்கால அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, தாங்கள் பேசும்பொருளாக மாறி வருவதாக அவர் கூறினார்.
அத்துடன், தற்போது வந்துள்ள அரசாங்கம், புதியதொரு திருப்பத்தைக் கொண்டு வரவேண்டும் என, 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் ஆனால், இதில் பெரியதாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை என தான் எண்ணுவதாகவும் அவர் கூறினார்.
“ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அது போன்று, நாடாளுமன்றத்தில் எவருமே எதிபார்க்காத வகையில், மூன்றில் இரண்டு எனும் பெரும்பான்மை கிடைத்துள்ள பின்னணியில், அரசமைப்பை மாற்றி, தங்களுக்கு ஓர் அமைப்பாக செய்துகொள்ளவேண்டு என்ற ஆர்வம், அரசாங்கத்துக்கு வந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள், ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற விடயமல்ல என்றும் இவ்வாறு ஆரோக்கியம் இல்லாத விடயங்களுக்கு, தாங்களும் ஆதரவளிக்க வேண்டும் என்ற அழுத்தம், தங்களை நோக்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
33 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
8 hours ago